Tuesday, February 9, 2010

விண்டோஸ் கணணியை வேகப்படுத்த சில டிப்ஸ்..





குறைந்தது மாதத்துக்கு ஒருமுறையாவது Disk Cleanup செய்யுங்கள். முக்கியமாக எப்போதாவது Disk Cleanup செய்பவராயின் எவ்வளவு நேரம் ஆனாலும் அது முடியும் வரை பொறுத்திருக்க தான் வேண்டும். பாதியில் நிறுத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை.



browser history அனைத்தையும் நீக்கி விடுங்கள். ஆனால் உலாவியில் ஏற்கனவே பதிந்துள்ள யூசர் நேம் பாஸ்வேட் போய்விடுமே. Firefox இல் முடியும் படத்தை பார்த்து இலக்கங்களின் ஒழுங்கில் தொடருங்கள்.











அதன் பின் கவலை இல்லாமல் அனைத்து browser history குக்கீஸ் உட்பட கீழுள்ள வாறு நீக்கி விடலாம். இதன் மூலம் கணணி வேகமும் இணைய வேகமும் அதிகரிக்கும்.







அதைவிட C டிரைவில் விண்டோஸ் Folder சென்று Prefetch மற்றும் Temp folder இல் உள்ளே Temporary Files அனைத்தையும் Delete செய்து விடுங்கள். அதே போல் விஸ்டாவில் C:\Users\கணணி பாவனையாளர் பெயர்\temp மற்றும் எக்ஸ்பியில் I:\Documents and Settings\கணணி பாவனையாளர் பெயர்\temp இல் உள்ள அனைத்தையும் நீக்கி விடலாம். இவை சில அடிப்படை தகவல்கள் மட்டும் தான். இவற்றை முதலில் கடைப்பிடியுங்கள் பின்னர் மேலதிக தகவல்களை பார்க்கலாம்.

No comments:

Post a Comment